திமுக வடக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 16முதல் 18ம் தேதி வரை நடக்கிறது: எம்.எல்.ஏ. செல்வராஜ் அறிக்கை

 

திருப்பூர், ஆக.12: திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக வருகிற 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மூன்று நாட்கள் திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

16ம் தேதி காலை 9 மணிக்கு இளைஞரணிக்கும், 10 மணிக்கு தகவல் தொழில் நுட்ப அணி, 11 மணிக்கு மாணவரணி, 12 மணிக்கு மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணியினர், பிற்பகல் 3 மணிக்கு நெசவாளர் அணி, மாலை 4 மணிக்கு மீனவர் அணி, 5 மணிக்கு அமைப்புசாரா ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் அணி, 6 மணிக்கு ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் சிறுபான்மை நல உரிமை பிரிவுக்கும் நடைபெற உள்ளது.

17ம் தேதி காலை 9 மணிக்கு விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி, 10 மணிக்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, 11 மணிக்கு இலக்கிய அணி, 12 மணிக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி, பிற்பகல் 3 மணிக்கு அயலக அணி, மாலை 4 மணிக்கு பொறியாளர் அணி, 5 மணிக்கு சட்டத்துறை, 6 மணிக்கு வர்த்தகர் அணிக்கு நடைபெற உள்ளது.18ம் தேதி காலை 9 மணிக்கு தொண்டர் அணி, 10 மணிக்கு சுற்றுச்சூழல் அணி, 11 மணிக்கு மருத்துவர் அணியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வெண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post திமுக வடக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 16முதல் 18ம் தேதி வரை நடக்கிறது: எம்.எல்.ஏ. செல்வராஜ் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: