பாளையில் அஞ்சல்துறை சார்பில் தேசிய கொடி விற்பனை விழிப்புணர்வு பேரணி

ெநல்லை, ஆக. 12: சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சலகங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி பாளையில் அஞ்சல் துறையினர் சார்பில் நடந்தது. இந்தியாவின் 76வது சுதந்திர தினம் வரும் 15ம்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய அஞ்சல்துறை மூலம் நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மூலமாகவும் ஒரு தேசிய கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாளையில் அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு நெல்லை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவாஜிகணேஷ் தலைமை வகித்தார். இப்பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி வ.உ.சி. மைதானம், லூர்துநாதன் சிலை வழியாக சென்று மீண்டும் பாளை தலைமை அஞ்சலகம் சென்று சேர்ந்தது. பேரணியில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பாலாஜி, பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி ராமச்சந்திரன், பிஆர்ஓக்கள் கனகசபாபதி, அண்ணாமலை உள்பட அனைத்து அஞ்சல் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

The post பாளையில் அஞ்சல்துறை சார்பில் தேசிய கொடி விற்பனை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: