கொளத்தூர் காவல் மாவட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி ஏற்பு

சென்னை; சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கொளத்தூர் காவல் மாவட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னையில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில். Drive Against Drug (DAD) என்ற பெயரில் போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டும் பள்ளி. கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும். போதைப்பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், 08.08.2023 முதல் 13.08.2023 வரை போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, இன்று (11.08.2023) சென்னை பெருநகர காவல், கொளத்தூர் காவல் மாவட்டம், ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையளார் மேற்கு மண்டலம் மனோகரன், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் சக்திவேல், உதவி ஆணையாளர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு “போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்” என்ற தலைப்பில் கொளத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுடன் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் தாமு போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஐ.சி.எப் பொது மேலாளர் பி.கே.மால்யா, டி.பி.காசார், கொளத்தூர் காவல் மாவட்ட காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் மற்றும் 6 பள்ளிகளை சேர்ந்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

The post கொளத்தூர் காவல் மாவட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: