அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைப்பு பெரம்பலூர் / அரியலூர் செங்குந்தபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா அம்மன் வீதியுலா

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோயிலில் உள்ள அம்மனுக்கு மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன், எலுமிச்சை, பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.

வீதி உலா நிகழ்ச்சி மாரியம்மன் கோயிலில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. செங்குந்தபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று பல்லக்கும் சனிக்கிழமையன்று செடல் தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தபுரம் உறவுமுறை பஞ்சாயத்தினர், ஊர் நாட்டான்மைகள், விழா கமிட்டியினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைப்பு பெரம்பலூர் / அரியலூர் செங்குந்தபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: