பின்னர் குமுதாவிடம் ‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை, நான் வேறு பெண்ணை விரும்புகிறேன்’ என கூறியுள்ளார். குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தாய் வீடான கல்லூரணியில் இருந்த குமுதா, சுதர்சன் விடுமுறையில் ஊருக்கு வந்திருப்பதை அறிந்து நேற்று முன்தினம் இரவில் கணவரின் வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், சுதர்சனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இதனால் விரக்தியடைந்த குமுதா தாய் வீட்டுக்கு திரும்பி அங்கு நேற்று அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கணவருடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ்காரர் வீட்டு முன்பு போராடிய மனைவி தற்கொலை appeared first on Dinakaran.
