இலங்கையில் பள்ளி மாணவர்களுடன் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு..கிரிக்கெட் உபகரணங்களை பரிசாக வழங்கினார்!!

கொழும்பு : யூனிசெப் தெற்கு ஆசிய பிராந்திய நல்லெண்ண தூதரான சச்சின் டெண்டுல்கர் இலங்கையில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஏழை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் கேகாலை மாவட்டத்தில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். தொடக்கப்பள்ளி ஒன்றுக்கு சென்று குழந்தைகளுடன் உரையாடிய சச்சின் டெண்டுல்கர், அவர்களுக்கு கைகளை சுத்தமாக வைத்து கொள்ளும் முறைகளை கற்று தந்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றுக்கு சென்ற டெண்டுல்கர், மாணவ, மாணவியர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு அவர் ஆர்வத்துடன் விளக்கம் அளித்தார். பள்ளி மாணவர்களுக்கு தான் கையொப்பமிட்ட கிரிக்கெட் உபகரணங்களையும் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார். ஆகஸ்ட் 6 முதல் 8ம் தேதி வரை இலங்கையில் யூனிசெப் அமைப்பில் ஏற்பாடு செய்து இருந்த பல்வேறு நிகழ்வுகளில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார்.

The post இலங்கையில் பள்ளி மாணவர்களுடன் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு..கிரிக்கெட் உபகரணங்களை பரிசாக வழங்கினார்!! appeared first on Dinakaran.

Related Stories: