திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா: 300 சிறப்பு பேருந்து ஏற்பாடு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாட்களுக்கு நடைபெறும் தெப்ப திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது . திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.

இதை ஒட்டி மூலவருக்கு சிறப்பு நேரிடும் உற்சவருக்கு தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பேரொளி வழிபாடும் நடைபெற்றது. பின்னர் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலை படிகள் வழியாக சரவண பொய்கை திருக்கோவிலுக்கு சென்று மூன்று முறை வளம் வந்தார்.

முதல் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடியுடன் வந்து முருகனை தரிசித்தனர். விழாவில் குட நெரிசலை தவிர்க்க திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி சீபாஸ் கல்யாண் தலைமையில்1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிக்த்தர்களின் வசதிக்காக திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திராவிலிருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்படுகின்றன.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா: 300 சிறப்பு பேருந்து ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: