சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில் பாரம்பரிய நெல்விதைப்பு திருவிழா

காரைக்குடி, ஆக. 7: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவி கிராமம் சேது பாஸ்கரா வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு பராம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடந்தது. கல்லூரி தலைவர் முனைவர் சேதுகுமணன் வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார். முன்னாள் வங்கி மேலாளர் பாரதி, முன்னோடி விவசாயிகள், கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

இதில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், தில்லைநாயகம் உள்பட பல்வேறு ரகங்கள் விதைப்பு செய்யப்பட்டது. சம்பா, தில்லைநாயகம் 150 நாட்களும், காட்டுயானம் 180 நாட்களும் வளரக்கூடிய ரகங்களாகும். உயர் விளைச்சல் தரக்கூடிய பாரம்பரிய நெல் ரகமான தில்லைநாயகம் சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில் மீ்்ட்டெடுக்கப்பட்டு புதிதாக விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று ரகங்களும் அதிக ஊட்டச்சத்து, மருத்துவ குணம் உடையது. வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இதுபோன்ற பாரம்பரிய நெல் விதைகள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த விதைப்பு திருவிழா நடத்தப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது ஊறுதிப்படுத்துவதுடன், வேளாண்மையில் புராட்சியை ஏற்படுத்தலாம் என கல்லூரி தலைவர் சேதுகுமணன் தெரிவித்தார்.

The post சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில் பாரம்பரிய நெல்விதைப்பு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: