மகளிர் உலக கோப்பை கால்பந்து; தென்ஆப்ரிக்காவை 2-0 என வீழ்த்தி நெதர்லாந்து கால் இறுதிக்கு தகுதி

சிட்னி: 32 அணிகள் இடையிலான 9வது மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகின்றன. முதல் சுற்று முடிவில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், நார்வே, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. நேற்று நடந்த நாக்அவுட் சுற்றில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்தையும், ஜப்பான் நார்வேயையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

இன்றுகாலை சிட்னியில் நடந்த நெதர்லாந்து-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், 9வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜில் ரூர்ட் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து 2வது பாதியில் ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் லினெத் பீரன்ஸ்டைன் கோல் அடிக்க 2-0 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி வரை போராடியும் தென்ஆப்ரிக்காவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தது.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து; தென்ஆப்ரிக்காவை 2-0 என வீழ்த்தி நெதர்லாந்து கால் இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: