மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி: சூரியனார்கோயில் ஆதீனம் பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆன்மிக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகளார் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கோயில் கருவறையில் பூஜை செய்வதற்கு தீட்சிதர்கள் தகுதி உடையவர்கள். அவர்களை பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். பூஜை முடிந்த பின் அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.தமிழகத்தில் 6ல் 4 பாகம் நிலங்கள் ஆதீனம், கோயில்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் வருவாய் வரக்கூடியவை.

கோயில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, இதுதான் நமது கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.

The post மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி: சூரியனார்கோயில் ஆதீனம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: