திண்டுக்கல்லில் ஆடி தள்ளுபடியாக ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் காய்கறிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில வாரங்களாக தக்காளியின் விலை ரூ.130 முதல் 200 வரை விற்பனையாகிறது. இந்நிலையில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரி சந்தோஷ், நேற்று ஆடி தள்ளுபடியாக ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். இதுகுறித்து வியாபாரி சந்தோஷ் கூறுகையில், ‘‘கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து தற்போது ரூ.120க்கு விற்பனையாகிறது. இதனால் ஆடி தள்ளுபடியாக ஒரு கிலோ தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்தோம். வாரம் ஒரு முறை இப்படி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

The post திண்டுக்கல்லில் ஆடி தள்ளுபடியாக ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: