‘இரண்டு வாங்கினால், ஒன்று இலவசம்’ ஆக.20 வரை கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை

கரூர், ஆக. 5: கோ-ஆப்டெக்ஸ் கரூர் விற்பனை நிலையத்தில், ‘இரண்டு வாங்கினால், ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த ஜூலை 24ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் வரும் 20ம்தேதி வரை நடைபெறும் என சேலம் மண்டல மேலாளர் காங்கேயவேலு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், துண்டுகள், திரைச்சீலைகள் போன்ற ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் பட்டுச் சேலை முதல் துண்டு வரை அனைத்து ரகங்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்பெறலாம். வாடிக்கையாளாகள் இரண்டு எண்ணிக்கையிலான ரகங்கள் வாங்கும் போது ஒரு ரகத்தின் விலைக்கு (குறைவான விலை) ஈடான மதிப்புள்ள துணி ரகங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் சேர்ந்து 11 மாதங்களுக்கான சந்தா தொகையை செலுத்தினால் 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்துகிறது. சேமிப்பு திட்டத்தின் 12வது மாத முடிவில் கூடுதல் பலனுடன் 30 சதவீத தள்ளுபடியில் துணி ரகங்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவல், கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘இரண்டு வாங்கினால், ஒன்று இலவசம்’ ஆக.20 வரை கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: