ஆடி மாத 2வது அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்ல 6 நாள் அனுமதி

திருவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு பவுர்ணமிக்கு 3 நாள், அமாவாசைக்கு 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மொத்தம் 8 நாள் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் விருதுநகர், மதுரை, நெல்லை, தேனி, சிவகங்கை, சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பாக ஆடி மற்றும் தை மாத அமாவாசை திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. இதில், 2வது அமாவாசை திருவிழா வரும் 16ம் தேதி வருகிறது. இதையொட்டி வரும் ஆக.12ம் தேதி முதல் 17ம் தேதி வரை 6 நாள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post ஆடி மாத 2வது அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்ல 6 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: