மாரியம்மன் கோயிலில் ஆடி பதினெட்டு சிறப்பு பூஜை

 

ஊட்டி, ஆக.4: ஆடி பெருக்கு தினமான நேற்று ஊட்டி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆடி மாதம் என்பதால் அம்மன் மற்றும் முருகன் கோயில்களில் ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோயில்களில் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் ஆடி பெருக்கு, ஆடி பதினெட்டு என்று அழைக்கப்படும் விழாவில் மங்களம் பெருக, சகல செல்வங்களும் பெருக, வேளாண்மை செழிக்க, உழவர் செழிக்க வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகள் திருமணத்தன்று அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்து, புது தாலி அணிந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் ஆடி பெருக்கு தினமான நேற்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி மாரியம்மன் கோயில் மற்றும் எல்க்ஹில் முருகன் கோயில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. மாரியம்மன் கோயிலில் ஆடிப்ெபருக்கு உற்சவம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதேபோல் குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில், மஞ்சகொம்பை நாகராஜர் கோயில், அன்னமலை முருகன் கோயில் உள்ளிட்ட மாரியம்மன் மற்றும் முருகன் கோயில்களில் ஆடிபெருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

The post மாரியம்மன் கோயிலில் ஆடி பதினெட்டு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: