நீலத் திமிங்கலத்தை விட பெரிய உயிரினம் கண்டுபிடிப்பு… பெருவில் கிடைத்த ஆரம்ப கால திமிங்கலத்தின் படிவங்கள்!!

பெரு: உலகத்தில் உள்ள விலங்குகளிலேயே நீலத் திமிங்கலம் தான் மிகப்பெரிய விலங்கினம் என்று நம்பப்பட்டு வரும் நிலையில், அதை விட பெரிய ஆரம்ப கால திமிங்கலத்தின் புதை படிவங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.சமீபத்தில் பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகால திமிங்கலத்தின் புதை படிவங்களை விஞ்ஞானிகள் ஜகா நகரில் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த பிரம்மாண்ட விலங்கு ஈசன்ஸ் சகாப்தத்தின் போது, அதாவது சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். பெருவில் கண்டறியப்பட்டதால் அதற்கு பெருசெட்டஸ் கொலோசஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சத திமிங்கலம் சுமார் 66 அடி நீளமும் 340 மெட்ரிக் டன் வரையும் எடைக் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கணினி மூலம் இந்த விலங்கினத்தற்கு அவர்கள் உயிரூட்டி உள்ளனர். பழங்கால டைனோசர்கள் மற்றும் இக்கால நீல திமிங்கலம் உட்பட வேறு எந்த விலங்குகளையும் விட இது பெரியது என்று அவர்கள் கூறுகின்றனர். தெற்கு பெருவின் கடலோர பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தாவர உண்ணியான இந்த திமிங்கலத்தின் 13 முதுகு எலும்புகள், 4 விளா எலும்புகள் மற்றும் 1 இடுப்பு எலும்பின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன. தற்போது வரை நீலத் திமிங்கலம் தான் மிகப்பெரிய உயிரினம் என்று அறியப்படும் நிலையில், அதை விட பெரிய உயிரினம் பழங்காலத்தில் வாழ்ந்து இருப்பது பெருவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

The post நீலத் திமிங்கலத்தை விட பெரிய உயிரினம் கண்டுபிடிப்பு… பெருவில் கிடைத்த ஆரம்ப கால திமிங்கலத்தின் படிவங்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: