சாலை பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்

கோபி: கோபி கச்சேரிமேட்டில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க கோட்ட செயற்குழு கூட்டம் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.கடந்த மாதம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி கோபி வாய்க்கால் ரோடு மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திடம் மனு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக கோட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.கோட்ட செயலாளர் கருப்புசாமி கோரிக்கை விளக்கவுரை யாற்றினார்.மாநில செயலாளர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் முருகன் நன்றியுரையாற்றினார்.கூட்டத்தில் கோட்ட, உட்கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சாலை பணியாளர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: