ஆக.9ம் தேதி பெருந்திரள் அமர்வு 8 மாவட்ட நிர்வாகிகள் நாளை ஆலோசனை: தொமுச அறிவிப்பு

சென்னை: ஆக.9ம் தேதி நடைபெறவுள்ள பெருந்திரள் அமர்வு தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளதாக தொமுச பேரவை அறிவித்துள்ளது. இது குறித்து தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய தொழிற்சங்க அமைப்புகள், தொழில்வாரியான தொழிற்சங்க அமைப்புகள், இதர தொழிலாளர் அமைப்புகள் ஜனவரி 30 அன்று தலைநகர் புதுடெல்லியில் கூடி எடுத்த முடிவின் அடிப்படையில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத – ஜனநாயக விரோத – தொழிலாளர் விரோத போக்குகளைக் கண்டித்து ஆகஸ்ட் 9ம் தேதி அன்று மாநிலத் தலைநகரங்களில் பெருந்திரன் அமர்வு நடத்துவதென எடுக்கப்பட்ட முடிவினை நடைமுறைப்படுத்திட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பேரவை நிர்வாகிகள், பேரவைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் சென்னை தொமுச பேரவை தலைமையகமான கலைஞரகத்தில் நாளை(ஆக.2ம் தேதி) காலை 10 மணியளவில் பேரவைப் பொருளாளர் நடராசன் தலைமையில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆக.9ம் தேதி பெருந்திரள் அமர்வு 8 மாவட்ட நிர்வாகிகள் நாளை ஆலோசனை: தொமுச அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: