ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா, பி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பி பிரிவில் அயர்லாந்துக்கு எதிராக நேற்று 0-0 என டிரா செய்து 2வது இடம் பிடித்த நைஜீரியா (5) அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், கனடா (4), அயர்லாந்து (1) அணிகள் மூட்டை கட்டின. சி பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோதிய ஜப்பான் 3-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 2 வெற்றி, 1 தோல்வியுடன் 2வது இடம் பிடித்த (6 புள்ளி) ஸ்பெயின் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற, இந்த பிரிவில் ஜாம்பியா (3), கோஸ்டா ரிகா (0) அணிகள் பரிதாபமாக வெளியேறின. ஜாம்பியா நேற்று 3-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
The post மகளிர் உலக கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஆஸி: ஜப்பான் ஹாட்ரிக் வெற்றி appeared first on Dinakaran.
