மகளிர் உலக கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் சுவிஸ், நார்வே

ஆக்லாந்து: மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆக்லாந்து நகரில் நேற்று நடந்த ஏ பிரிவு கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் நார்வே-பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு 3 புள்ளிகளுடனும், நார்வே ஒரு புள்ளிகளுடனும் இருந்தால் வெற்றிப் பெற்றாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்ற வாய்ப்பில் பிலிப்பைன்ஸ் இருந்தது. டிராவானல் சுவிட்சர்லாந்து-நியூசிலாந்து ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை.

ஆனால் நார்வே வீராங்கனை சோஃபி ரோமன் ஆட்டத்தின் 6, 17, 90+5 நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். கூடவே கரோலின் 31வது நிமிடத்திலும், குரோ ரீய்டன் 53வது நிமிடத்தில் கோலடித்தனர். போததற்கு பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலீசியாவின் கோல் தடுப்பு முயற்சி வீண் ஆனதால் அது சுய கோலாக மாறியது. எனவே நார்வே ஆட்டத்தின் முடிவில் 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது.

அதேபோல் டூனேடின் நகரில் நடந்த மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. அந்த கட்டாயத்தால் இரு அணிகளும் சமபலத்தை வெளிப்படுத்தின. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே நியூசி கோல் அடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அந்த முயற்சிகள் இரு அணிகளுக்கும் பலன் தரவில்லை. அதே நிலைமை கடைசி வரை தொடர ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

ஏ பிரிவில் உள்ள அணிகளுக்கான லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் சுவிட்சர்லாந்து 5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. நார்வே, நியூசி தலா 4 புள்ளிகள் பெற்றாலும் அடித்த கோல்களின் எண்ணிக்கை காரணமாக நார்வே 2வது இடத்தை உறுதி செய்தது.எனவே சுவிஸ், நார்வே அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. போட்டியை நடத்தும் நியூசியுடன், 3புள்ளிகள் பெற்ற பிலிப்பைன்சும் போட்டியில் இருந்து வெளியேறின.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் சுவிஸ், நார்வே appeared first on Dinakaran.

Related Stories: