குளித்தலை புனித கிறிஸ்தீனம்மாள் ஆலய தேர் பவனி

குளித்தலை, ஜூலை 30: குளித்தலை புனித கிறிஸ்தீனம்மாள் ஆலய பங்கு பெருவிழாவையொட்டி நேற்று தேர் பவனி நடைபெற்றது. குளித்தலை ஆர்.எஸ்.ரோட்டில் உள்ள புனித கிறிஸ்தீனம்மாள் ஆலய பங்கு பெருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மறை மாவட்ட குருகுல முதல்வர் பங்கு தந்தை அந்துவான் நவநாள் திருப்பலி நிறைவேற்றினார். நேற்று (சனிக்கிழமை) மாலை சுப்பிரமணியபுரம் பங்குத்தந்தை பிலோமின் ராஜ், திருச்சி மறை மாவட்ட அருள் பணி நடுவம் இயக்குநர் அம்புரோஸ் ஆகியோர் திருவிழா திருப்பலி நிறைவேற்றினர்.

தொடர்ந்து பேண்ட், வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஆலயத்திலிருந்து தேர் பவனி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருவிழா நன்றி திருப்பலி நிறைவேற்றி கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அல்போன்ஸ், சாந்திவனம் துறவிகள், புனித அன்னாள் சபை அருட் சகோதரிகள், ஜீசஸ் கான்வென்ட் அருட் சகோதரிகள், பக்த சபைகள், அன்பியங்கள் இளையோர் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

The post குளித்தலை புனித கிறிஸ்தீனம்மாள் ஆலய தேர் பவனி appeared first on Dinakaran.

Related Stories: