பூந்தமல்லி அருகே கர்நாடக அரசு பேருந்து – லாரி மோதி விபத்து… 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் இருந்து 22 பயணிகளோடு சென்னை கோயம்பேடு நோக்கி வந்து கொண்டு இருந்த குளிர்சாதன வசதி கொண்ட அரசு பேருந்து, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவேற்காடு சாலைக்கு திரும்பிக் கொண்டு இருந்த செங்கல் லோடு லாரி மீது மோதியது. பூந்தமல்லி அருகே வேலப்பன் சாவடி சந்திப்பை கடக்கும்போது ஏற்பட்ட இந்த விபத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து தீப்பற்ற தொடங்கியது.

இதனை பார்த்த பயணிகள் பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்து வெளியே வர தொடங்கினர். அவர்களுக்கு அங்கிருந்தவர்கள் உதவி செய்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். பேருந்து முழுவதுமாக எரிந்து அருகில் இருந்த லாரியில் தீ பரவியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post பூந்தமல்லி அருகே கர்நாடக அரசு பேருந்து – லாரி மோதி விபத்து… 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: