2 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி வருவாய்!: கேரளத்து மக்கள் நாள்தோறும் 6 லட்சம் லிட்டர் மதுபானம் அருந்துவதாக புள்ளி விவரங்களில் தகவல்..!!

திருவனந்தபுரம்: கேரளத்து மக்கள் நாள்தோறும் 6 லட்சம் லிட்டர் மதுபானம் அருந்துவதாக புள்ளி விவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. மதுவிற்பனை மூலம் கேரள அரசுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2 ஆண்டு தினந்தோறும் கேரளத்தவர்கள் மது குடிக்கும் அளவு ஒரு லட்சம் லிட்டர் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021ல் நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கேரள மதுபான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, 2021 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை 41,68,60,913 லிட்டர் மதுபானம் கேரளத்தில் விற்பனையாகி உள்ளது என பெவ்கோ தெரிவித்திருக்கிறது. மதுபானம் தவிர 2021 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை 16,67,26,621 லிட்டர் ஒயின், பீர் வகைகள் விற்பனையாகி உள்ளன. ஒயின், பீரையும் சேர்த்தால் கேரளத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் கூடுதல் மதுபானம் விற்பனையாவதாக பெவ்கோ தகவல் அளித்துள்ளது.

2021 மே முதல் 2023 மே மாதம் வரை மதுபானம் விற்பனை மூலம் கேரள அரசு ரூ.31,911.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஒயின், பீர் விற்பனை மூலம் 2021 மே முதல் 2023 மே மாதம் வரை கேரள அரசுக்கு ரூ.3050.44 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மதுபான விற்பனை வருமானம் தவிர, மதுபான நிறுவனம் செலுத்திய வரி மூலம் அரசுக்கு மேலும் ரூ.24,539.72 கோடி கிடைத்துள்ளது.

The post 2 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி வருவாய்!: கேரளத்து மக்கள் நாள்தோறும் 6 லட்சம் லிட்டர் மதுபானம் அருந்துவதாக புள்ளி விவரங்களில் தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: