சிங்கம்புணரி மழுவேந்தி கருப்பர் கோயிலில் ஆடி படையல் திருவிழா

 

சிங்கம்புணரி, ஜூலை 27: சிங்கம்புணரி கீழத்தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோவில் ஆடி படையல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி, கிருங்காக் கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிரான்மலை பகுதி சேர்ந்த பக்தர்கள் மேலப்பட்டி ஆற்றில் தீர்த்தமாடி ஊற்று நீரை எடுத்து வந்தனர். பிள்ளையார்பட்டியில் மழுவேந்தி கருப்பர் சாமியாடி புனித நீர் ஊற்றிய கரகத்தை தலையில் சுமந்து 6 அடி நீளமுள்ள 2 அரிவாள்கள் மீது ஏறி அருள்வாக்கு கூறினார்.

சாமியாடியுடன் ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள் சுமந்தும், அக்னிசட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். அரிவாள் மீது நின்ற சாமியாடியை 10 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் சுமந்து சிங்கம்புணரி நாவிதர் ஊரணியை வந்தடைந்தனர். அங்கிருந்து பெரிய கடை வீதி வழியாக கீழத் தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோவிலை வந்தடைந்தனர். அங்கு இரவு கிடா வெட்டி வழிபாடுநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிங்கம்புணரி மழுவேந்தி கருப்பர் கோயிலில் ஆடி படையல் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: