போலீசுக்கு இடையூறு பாஜ நிர்வாகி கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணி செய்ய விடாமல் தடுத்த பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பாஜ ஒன்றிய இளைஞரணி செயலாளர் உதயகுமார் (28). இவரது உறவினரின் ஆட்டுக்குட்டி சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்தது. அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்க உதயகுமார், காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது போலீசாருக்கும், உதயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து உதயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் சிறையில் அடைத்தனர்.

The post போலீசுக்கு இடையூறு பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: