மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: மாவட்ட கல்வி அதிகாரி வழங்கினார்

 

திருவள்ளூர்: மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். திருவள்ளூர், சிஎஸ்ஐ கௌடி மேல்நிலைப்பள்ளியில் 250 மணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்விதுறை சார்பாக விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எப்சிபா கேத்ரின் தலைமை தாங்கினார். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் பி.சார்லஸ் அருள்செல்வன் வரவேற்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.தேன்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி கல்விதுறை சார்பாக 250 மணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது; மாணவர்கள் தன்னைத் தானே தரம் அறிந்தால் நல்ல ஒரு இலக்கை அடையமுடியும். முக்கியமாக மாணவர்கள் அதிகநேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும். செல்போன் பழக்கத்தை குறைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: மாவட்ட கல்வி அதிகாரி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: