மக்களவை தேர்தலில் மஜத தனித்து போட்டி: தேவகவுடா திட்டவட்டம்

பெங்களூரு: முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா பெங்களூருவில் கூறுகையில், ‘சட்டப்பேரவையில் 10 பாஜ உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் எடுத்த நடவடிக்கையை கண்டித்து அக்கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு குமாரசாமி ஆதரவு கொடுத்தார். அதற்காக பாஜவுடன் மஜத கூட்டணி அமைத்து விட்டதாக கருதக்கூடாது. அதற்காக குமாரசாமி எதிர்க்கட்சி தலைவராகிறார் என்பது சரியான வாதம் கிடையாது. அடுத்தாண்டு மக்களவைக்கு நடக்கும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவோம். பாஜவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்’ என்றார்.

The post மக்களவை தேர்தலில் மஜத தனித்து போட்டி: தேவகவுடா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: