சினேகவல்லி கோயிலில் திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

திருவாடானை, ஜூலை 25: திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிரெத்தினேஸ்வரர் சமேத சினேக வல்லி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 21ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருகல்யாண வைபவம் அதிவிமர்ச்சையாக நடைபெற்றது.

திருகல்யாண வைபவத்திற்கு முன்பாக அம்மன் ஆராட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது ஒன்பது கன்னி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்வினை தொடர்ந்து மாங்கல்யத்தை வைத்து யாகசாலை பூஜை நடைபெற்று பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வும் சுவாமிக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகமும் விழா கமிட்டியும் செய்திருந்தனர்.

The post சினேகவல்லி கோயிலில் திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: