சென்னை: தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். மக்களவை தேர்தலுக்கான பணியை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. அதன் அடிப்படையில் தேமுதிகவும் மக்களவை தேர்தல் பணியை தொடங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாததால் தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை.
கூட்டணியில் இல்லாததாலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக்கு தங்களை பாஜக அழைக்கவில்லை. தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றார். திமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை எனவும் பிரேமலதா தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடையே பல முரண்பாடு உள்ளதாக தெரிவித்தார்.
The post தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் appeared first on Dinakaran.
