இலவச தையல் இயந்திரம் வழங்கல்

 

வருசநாடு, ஜூலை 24: கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனம் மற்றும் அமெரிக்கா எய்ம்ஸ் இந்தியா பவுண்டேசன் இணைந்து மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 30 கிராமங்களில் மாணவர்களின் வளர்ச்சி மையம் நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஆண்டு விழா மற்றும் பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்திட்டத்தில் 30 மையங்களில் 850 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தில் பயிற்சி மேற்கொண்ட 20 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் எய்மஸ் இந்தியா பவுண்டேசன் ஜெய் வேணுகோபால், வட்டார வளமையம் பாரதி, கண்ணன், வக்கீல் வசந்த நாராயணான் மற்றும் 30க்கும் மேற்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லா தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் செய்திருந்தார். முடிவில் கிருஷ்ணபிரியா சந்திரகலா நன்றி கூறினர்.

The post இலவச தையல் இயந்திரம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: