கோவை தொகுதியில் கமல்ஹாசன் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் பேட்டி

 

கோவை, ஜூலை 24: கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி வாரியாக மக்களோடு மய்யம் என்கிற தலைப்பில் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டு வருகின்றனர். அதன்படி, கோவை தெற்கு தொகுதிகுட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கலாமா? அல்லது கூட்டணியோடு நிற்கலாமா? என்பது குறித்தும் மக்களிடம் வீடு வீடாக சென்று கேட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவை தொகுதியில் கமல்ஹாசன் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: