சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் 95வது நிறுவன நாள், தொழில் நுட்பநாள் விழா

திருச்சி, ஜூலை 23: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் 95வது நிறுவன நாள் மற்றும் தொழில்நுட்ப நாள் விழா திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு சிறுகமணி ேவளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் முரளி அர்த்தநாரி தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறியவில் நிலையம் சிறந்த பங்காற்றி வருகிறது. உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பின் மூலம் பல நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது என்றார்.

விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை பேராசிரியர் மாசிலாமணி மர நாற்றங்கால் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்தும், ெதாழில்மர ஆராய்ச்சி கூடத்தின் வனச்சரக அலுவலர் உமா தொழில்மர வேளாண் காடுகள், காடுகளின் முக்கியத்துவம், திட்டங்கள் மற்றும் தொழில்மர ஆராய்ச்சி கூடத்தில் நடந்து வரும் தொழில்மர ஆராய்ச்சிகள் குறித்தும் விளக்கினார். TNPL- முதுநிலை மேலாளர் செழியன் கரூர் குளோனல் நாட்டுமர உற்பத்தி மற்றும் பண்ணை காடுகள் திட்டம் குறித்து விளக்கினார். பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்களை விளக்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் விதை அமிர்தம் மூலம் பயறவகை பயிர்களில் விதை நேர்த்தி செய்வது, தேனீ பெட்டியை கையாளும் முறை குறித்த செயல்விளக்கம் நடந்தது. விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நவீன தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு உபகரணங்கள், பல்வேறு பொறிகள், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு உபகரணங்கள், தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழக ‘நியூட்ரி வெஜ்’ மற்றும் ‘குளோனல்’ மர நாற்றுகள் உள்ளிட்டவை விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறு ஆடாதோடா மூலிகை மரக்கன்று மற்றும் மூலிகை செடிகளின் பயன்பாடு குறித்த கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை பேராசிரியர் புனிதவதி வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளை பூச்சியியல்துறை பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறு ஆடாதோடா மூலிகை மரக்கன்று மற்றும் மூலிகை செடிகளின் பயன்பாடு குறித்த கையேடு வழங்கப்பட்டது. விழாவில் 50 பண்ணை மகளிர் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் 95வது நிறுவன நாள், தொழில் நுட்பநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: