பாஜ கூட்டணியில் குழப்பம்: ஹாஜிபூர் தொகுதிக்காக சிராக்-பராஸ் மோதல்

பாட்னா: பீகாரின் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும் மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான். கடந்த 2019ல் பாஜ கூட்டணியிலிருந்து விலகிய இவர் சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மீண்டும் பாஜ கூட்டணியில் சேர முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி தனது தந்தையின் சொந்த மக்களவை தொகுதியான பீகாரின் ஹாஜிபூரில் போட்டியிடுவேன் என்றும் கூறி உள்ளார்.

இதனால், சிராக் பஸ்வானுக்கும் அவரது சித்தப்பாவும் ஒன்றிய அமைச்சருமான பசுபதி குமார் பராஸுக்கும் இடையே சண்டை தொடங்கி இருக்கிறது. தற்போதைய ஹாஜிபூர் எம்பியான பராஸ் தனது பாரம்பரியத்தை விட்டுத்தர முடியாது என கூறி உள்ளார். பாட்னாவில் தனது ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தலைமையகத்தில் நேற்று பேட்டி அளித்த பராஸ், ‘‘இன்னும் நான் பாஜ கூட்டணியில் இருக்கிறேன். ஆனால் சிராக் அழையா விருந்தாளியாக தான் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அவர் கூட்டணிக்கு வருவது இன்னும் முடிவாகவில்லை. அதுமட்டுமின்றி ஹாஜிபூரில் நான் மீண்டும் போட்டியிடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மழை நீரில் தவளைகள் சத்தம் போடுவதை எல்லாம் ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

The post பாஜ கூட்டணியில் குழப்பம்: ஹாஜிபூர் தொகுதிக்காக சிராக்-பராஸ் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: