கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 35,925 முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை ரீதியான அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்;

முதியோர் உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 1000-லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்கப்படும். மாதாந்திர ஓய்வூதியத் தொகை திட்டம் மூலம் 30.55 லட்சம் பேர் பயன் பெறுவர். பல்வேறு வரையறையின் கீழ் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ள 74ஆயிரம் பேரில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம்கள் திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 50 லட்சம் மகளிருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 21,000 முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கான ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும்.

முதியவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும். பல்வேறு நல வாரியங்கள் சார்பில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கும் தற்போதைய அறிவிப்பு பொருந்தும். மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் காக்கும் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் சமூகத்திற்கே தலைகுனிவு. என்று அமைச்சர் தெரிவித்தார்.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 35,925 முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: