ராகிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

 

ஊட்டி, ஜூலை 22: நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவின் பேரில் குன்னூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி சந்திரசேகரன் வழிகாட்டுதல் படி குன்னூர் பிராவின்ஸ் பெண்கள் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் தலைமைவகித்தார்.

மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வனிதா பங்கேற்று, மாணவியர்களிடையே சட்ட விழிப்புணர்வு மற்றும் ராகிங்கிற்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ராகிங் குற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும் சமூகத்துறைைய சேர்ந்த சிந்து, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினார். இதில் ஏராளமான மாணவியர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராகிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: