இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து(38) என்பவருக்கும், தனலட்சுமிக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். ஒரு கட்டத்தில் மாரிமுத்துவின் பார்வை தனலட்சுமியின் மகள் உமாமகேஸ்வரி மீது விழுந்தது. இதனால் தனலட்சுமி அதிர்ச்சியடைந்தார். ஆனால் உமா மகேஸ்வரிக்கும், மாரிமுத்துவை பிடித்துப்போக தாய் தனலட்சுமிக்கு தெரியாமல் கடந்த 2022 டிசம்பர் 4ம் தேதி மாரிமுத்துவை திருமணம் செய்து கொண்டு மயிலாடுதுறையில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எந்த வேலைக்கும் போகாத மாரிமுத்து, மனைவியை கண்காணிப்பதையே வேலையாக வைத்திருந்தார். மனைவி வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் உமா மகேஸ்வரி, தாய் தனலெட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாரிமுத்து சைக்கோ போல தன்மீது சந்தேகப்படுவதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் உமாமகேஸ்வரியை அவரது கணவர் மாரிமுத்துவிடம் இருந்து பிரித்து அழைத்து வந்து தாய் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 20ம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சிலருடன் வந்த மாரிமுத்து, தாயுடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இதுகுறித்து, தனலெட்சுமி அன்றிரவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் ஒரு மாதமாகியும் உமாமகேஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனலட்சுமி மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது தனது மகள் அவருடன் இருந்தபோது, உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவை போலீசரிடம் வழங்கினார். அதில் மாரிமுத்து, ‘மகேஸ்வரி உன்னை உயிரோடு விட மாட்டேன். எனக்கு துரோகம் செஞ்ச உன்ன விடமாட்டேன், உன் உயிர் ஊஞ்சலாடுது’ என்று மிரட்டியிருந்தார். இதையடுத்து எனது மகள் உயிரோடு இருக்கிறாரா என்றே தெரியவில்லை. அவளை மீட்டுத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
The post ‘உன் உயிர் ஊஞ்சலாடுது’ என காதல் கணவன் ஆடியோ திருமணம் செய்து பிரிந்ததால் இளம்பெண் கடத்தி கொலை? தாயுடன் தகாத உறவு வைத்துக்கொண்டே மகளுக்கு தாலி கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.
