இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் வெப்பத்தால் பாதிப்பு..!!

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெப்பம் காரணமாக இத்தாலியில் 16 நகரங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரலாறு காணாத வெப்பம் அலை வீசி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே ஜெரன் என பெயரிடப்பட்டுள்ள வெப்ப புயல் இத்தாலியை தாக்கி இருப்பதால் ரோம் நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குளிர்ந்த தண்ணீரை பீச்சியடிக்கும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தாலியில் 16 நகரங்களில் கடுமையையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் வெப்பத்தால் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: