ஊட்டி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கம்

 

ஊட்டி,ஜூலை20: உதகை அரசு மேல் நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது.மன்ற ஒருங்கிணைப்பாளர் முதுகலை ஆசிரியை ஷெரீன் முன்னிலை வகித்தார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் கருத்தாளராக கலந்து கொண்டு பேசுகையில்: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார கொள்கைகள் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாட்டை பெரும் சந்தையாக மாற்றியுள்ளன. மனிதர்களை பொருள் தின்னிகளாக மாற்றியுள்ளன.

தொலைக்காட்சி தொடர்கள் பெண்களை விளம்பரங்கள் மூலம் மூளைச் சலவை செய்து பொருள்களை வாங்கி குவிக்கும் நுகர்வு கலாச்சார வலைக்குள் சிக்க வைத்துள்ளன. இதனால் கடன், லஞ்சம், வரதட்சணை போன்ற சமூக தீமைகள் சமுதாயத்தை சீரழத்து வருகின்றன.எனவே இளைய தலைமுறையினர் நுகர்வு கலாச்சார வலைக்குள் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்த அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு விழிப்புணர்வு பெற்ற சமுதாயம் அமைய செயல்பட வேண்டும், என்றார்.

The post ஊட்டி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: