பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர்: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தகவல்

டெல்லி: பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23ம் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதனைத் தொடர்ந்து தற்போது மொத்தம் 26 கட்சிகள் பெங்களூரில் திரண்டுள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயர் ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த பெயருக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் பல்வேறு பெயர்களை பரிந்துரைத்தன. வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பெயர்களை முன்மொழிந்த நிலையில் ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கும் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2024 தேர்தலில் INDIA vs NDA?

2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் INDIA vs பாஜகவின் NDA கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) என அழைக்கப்படுகிறது.

The post பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர்: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: