அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை தாயகம் சார்பில் சுற்று சூழல் பாதுகாப்பு கையெழுத்து விழிப்புணர்வு


கும்மிடிப்பூண்டி: பசுமை தாயகம் சார்பில் சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடந்தது. கும்முடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பசுமைத்தாயகம் 25ம் ஆண்டு விழா முன்னிட்டு, இந்த அமைப்பு சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சங்கர் கலந்து கொண்டார். பின்னர், மாணவ, மாணவிகளுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதனை தொடர்ந்து, 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதில் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

இதனை தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழியும் மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் பேருந்து நிலையம், சுண்ணாம்புகுளம், ஒபசமுத்திரம் ஆகிய நிகழ்ச்சியில், பசுமைத் தாயகம் அமைப்பினர் கைகளில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த உறுதிமொழி பதாகையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி கையொப்பமிட்டனர். இந்நிகழ்ச்சியில், பசுமைத்தாயகம் அமைப்பின் மாநிலத் துணைச் செயலாளர் பத்மநாபன், பாமக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், பேருராட்சி தலைவர் சகிலா அறிவழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் ரவி, துரை ஜெயவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை தாயகம் சார்பில் சுற்று சூழல் பாதுகாப்பு கையெழுத்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: