ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்

 

கரூர், ஜூலை 15: கரூர் ஈரோடு சாலை ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் ஈரோடு சாலையில், கரூர் மாநகரத்தை தாண்டியதும் ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதி உள்ளது. இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், ஆண்டாங்கோயில் கிழக்கு பஞ்சாயத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு அவை முறைப்படி அகற்றாமல், ஆங்காங்கே தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும், ஈரோடு செல்லும் சாலையோரத்திலும் குப்பைகள் தேங்கும் காரணத்தினால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், காற்றின் காரணமாக குப்பைகள் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் செல்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே, சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் முறைப்படி அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, குப்பைகள் சாலையோரம் தேங்காத வகையிலும், உடனுக்குடன் அப்புறப்படுத்தும் வகையிலும் அதற்கான முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: