ஜோஸ் ஆலுக்காசுக்கு பிளாட்டினம் ‘சீசன் ஆப் லவ்’ விருது

சென்னை: பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் (PGI) இந்தியாவின் 2023ம் ஆண்டுக்கான பிளாட்டினம் ‘சீசன் ஆப் லவ்’ விருதினை, மிகவும் புகழ்பெற்ற ரீடெயில் செயின் ஸ்டோரான ஜோஸ் ஆலுக்காஸ் பெற்றுள்ளது. ரீடெயில் செயின் ஸ்டேர்களின் உலகத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு முன்னோடியான வழிகாட்டி என்றே சொல்லலாம். வாடிக்கையாளர்களுக்கு மிக மிகச் சிறந்த, தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எடுக்கும் தீவிரமான முயற்சிகளின் மூலம் வாடிக்கையாளர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

இந்த நிறுவனம், நகை தயாரிப்பு துறையின் அளவு கோல்களையே உயர்த்திச் செல்கிறது. பிளாட்டினம் சீசன் ஆப் லவ்’ விருதினை ஜோஸ் ஆலுக்காஸ் பெற்றுள்ளதால், இது ஒரு முன்னணி ரீடெயில் செயின் ஸ்டோர் என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக சிறந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பிளாட்டினம் நகைகளை ஸ்டாக் செய்துள்ளதற்காக மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான மறக்க முடியாத ஷாப்பிங் அனுபவம் வழங்குவதற்காகவும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மிகுந்த பாராட்டைப் பெறுகிறது.

The post ஜோஸ் ஆலுக்காசுக்கு பிளாட்டினம் ‘சீசன் ஆப் லவ்’ விருது appeared first on Dinakaran.

Related Stories: