காயரம்பேடு ஊராட்சியில் ரூ.7 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: காயரம்பேடு ஊராட்சியில் ரூ.7 கோடி 4 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், காஞ்சிபுரம் கோட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசு பங்களிப்புடன் ஒப்புதல் பெறப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காயரம்பேடு திட்ட பகுதியில் ரூ.7 கோடி 4 லட்சம் மதிப்பீட்டில் தலா 400 சதுர அடி பரப்பில் 64 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது, அங்கு இருந்த செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த பழங்குடி இருளர் மக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் காட்டாங்கொளத்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், காயரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி புஷ்பராஜ், துணை தலைவர் திருவாக்கு, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post காயரம்பேடு ஊராட்சியில் ரூ.7 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: