கொழிஞ்சாம்பாறை கிராமத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

 

பாலக்காடு, ஜூலை 13: பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை கிராமப்பஞ்சாயத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியை மகளிர் காவல் அதிகாரிகள் நேற்று வழங்கினனர். பாலக்காடு மாவட்டத்தில் மகளிருக்கும், மாணவியர்களுக்கும் ஏற்படுகின்ற பாலியல் பலாத்காரம், சில்மிஷம் மற்றும் ரோட்டில் நடமாடும் பெண்களிடம் வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்களிலிருந்து பெண்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பாலக்காடு ஹேமாம்பிகா நகர் போலீஸ் ஸ்டேஷன் சீனியர் சிவில் போலீஸ் அதிகாரி சரளா, நாட்டுக்கல், சித்தூர் போலீஸ் ஸ்டேஷன் சிவில் போலீஸ் அதிகாரிகள் சஜிதா, உஷஸ் ஆகியோர் தலைமையில் கொழிஞ்சாம்பாறை கிராமப்பஞ்சாயத்தில் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் கிராமப்பஞ்சாயத்து ஊழியர்களுக்கும், தூய்மை பணியாளர்களும், சுயஉதவிக்குழு மகளிருக்கும் தற்காப்புகலை பயிற்சிகள் அளித்தனர்.

பைக்கில் வரும் நபர்கள் தங்களிடம் முகவரி கேட்பதென்றால் எவ்வளவு தூரம் தள்ளி நின்று பேச வேண்டும். பஸ்களில் தொந்தவு செய்கின்ற ஆட்களை உடனடியாக மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இரவு நேரங்களில் பஸ்களிலும், ரயில்களிலும் தனியாக பயணிக்கின்ற பெண்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பன அறிவுரைகளை மகளிர் காவல் அதிகாரிகள் பெண்களுக்கு வழங்கினர். பஞ்சாயத்துத் தலைவர் சதீஷ் தொடங்கி வைத்து பேசினார். பஞ்சாயத்து செயலாளர் ராதா, உறுப்பினர் வனஜா கண்ணன், குடும்பஸ்ரீ தலைவர் பிரசன்னா, ஐஆர்டிசி துணை ஒருங்கிணைப்பாளர் நிஷா சஜித், பஞ்சாயத்து மகளிர், பேரிடர் மீட்புக்குழுவினர், வார்டு உறுப்பினர்கள் என 50 மகளிர் இந்த பாதுகாப்பு பயிற்சி பங்கேற்றிருந்தனர்.

The post கொழிஞ்சாம்பாறை கிராமத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: