பூமலூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார்

 

பல்லடம், ஜூலை 13: பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை செல்வராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சியில் கான்கிரீட் தளம் அமைத்தல் பணி, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி, புதிய தெருவிளக்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தல் ஆகியவற்றை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், பல்லடம் திமுக ஒன்றிய செயலாளர்கள் என்.சோமசுந்தரம் (கிழக்கு), எஸ்.கிருஷ்ணமூர்த்தி (மேற்கு), பி.அசோகன் (பொங்கலூர் மேற்கு), மாவட்ட பிரதிநிதிகள் பூமலூர் செந்தில் என்கிற தியாகராஜ், 63 வேலம்பாளையம் நடராஜ், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அக்ரோ சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாலசுப்பிரமணியம், பூமலூர் ஊராட்சி தலைவர் பிரியங்கா, துணைத்தலைவர் நடராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கருப்பராயன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பூமலூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: