சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ரூ.60.56 லட்சத்துக்கு ஏலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி 3106 மூட்டை ரூ.60.56 லட்சத்துக்கு ஏலம் போனது.சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், டிஜி புதூர், கடத்தூர், கோரமடை, பெரியூர், உக்கரம், காராப்பாடி, சிங்கிரிபாளையம், உடையாக்கவுண்டன்பாளையம், பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 3106 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இந்த ஏலத்தில் கோவை, அன்னூர், அவிநாசி, புஞ்சைபுளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு மறைமுக முறையில் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப ஏலம் கூறினர். ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6696க்கும், குறைந்தபட்சமாக ரூ.5447 க்கும் ஏலம் போனது. மொத்தம் 3106 மூட்டை பருத்தி ரூ.60.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது. ஏலம் முடிந்தவுடன் பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் பருத்தி ஏல தொகை செலுத்தப்பட்டதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ரூ.60.56 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: