நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப் பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒரு கோடி பேர் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை பெற இருக்கிறார்கள், ஒரு கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட இருப்பதால் சிலருக்கு எரிச்சல் வருகிறது என திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் திருமண விழாவில் முதல்வர் பேசியதாவது; “2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியதா?, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என சொன்னதை செய்யவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ஒரு குடும்பத்திற்கு 15 லட்சம் தருவேன் என சொன்னார்கள், ஆனால் இதுவரை 15 ரூபாய் கூட தரவில்லை.

பிரதமர் என்ற நிலையை மறந்து மோடி ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார், சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே, எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப் பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம். 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப் பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: