குமரி கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

நாகர்கோவில், ஜூலை 9: குமரி கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். திமுக வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்டிருந்தார். அந்த வகையில் குமரி கிழக்கு மாவட்டத்தில் வர்த்தக அணி தலைவர் நீலராஜன், துணை தலைவர் குமார், அமைப்பாளர் சி.என்.செல்வன், துணை அமைப்பாளர்கள் தங்கதுரை, முத்துகிருஷ்ணன், மோகனகுமார், சகாய மோசஸ் ஜெயகுமார், வாரன், மகா விஷ்ணு, ஆர்.டி.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவர் எப்.எம். ராஜரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், ரமேஷ்பாபு, அரசு வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post குமரி கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளருடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: