எல்லைகளற்ற சுற்றுலா பகுதி இலங்கை அதிபர் யோசனை

கொழும்பு: இந்திய டிராவல் ஏஜென்டுகள் சங்கத்தின்(டிஏஏஐ) மாநாடு கொழும்புவில் நடந்தது. இதில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேசுகையில்,‘‘ 2022ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த 7 கோல்ப் மைதானங்கள் அமைக்கப்படும். சுற்றுலா துறை வளர்ச்சிக்காக சட்டங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள் எல்லைகளை கடந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளில் சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அந்த இடங்களை எல்லைகளற்ற சுற்றுலா பகுதியாக மாற்ற வேண்டும்’’ என்றார். வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு எனப்படும் பிம்ஸ்டெக் என்ற அமைப்பில் வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய 7 நாடுகள் உள்ளன. வங்காள விரிகுடா கடற்கரையிலமைந்திருக்கும் நாடுகளிடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

The post எல்லைகளற்ற சுற்றுலா பகுதி இலங்கை அதிபர் யோசனை appeared first on Dinakaran.

Related Stories: