மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை ஓயாததால் வரும் 10ம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை ஓயாததால் வரும் 10ம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி இரண்டு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதன் காரணமாக மாநிலத்தில் 2 மாதமாக பதற்றம் நீடித்து வருகின்றது. இந்த வன்முறையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் மாநிலத்தை விட்டே வெளியேறியுள்ளனர். அங்கு ராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இதனிடையே கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூரில் இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தற்போது இணையதள சேவைக்கான தடை மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை ஓயாததால் வரும் 10ம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: