பிரதமர் மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்: ராகுல்காந்தி பேச்சு

ஜம்மு-காஷ்மீர்: பிரதமர் மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர், சூரன்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி பேசியதாவது;

பிரதமர் மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை. நாடு முழுவதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மட்டுமே வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் எதைச் செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்து வருகிறோம். மோடி அரசு மக்கள் விரோத சட்டத்தை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அவர்கள் முன் நிற்பதால் யு டர்ன் எடுக்கிறார்கள். புதிய சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே காங்கிரசின் முதன்மையான கோரிக்கை. நாம் வலுவாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் எதை செய்ய நினைக்கிறதோ அதுதான் நடக்கிறது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

The post பிரதமர் மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்: ராகுல்காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: